search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு அதிகரிப்பு"

    மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 5 ஆயிரத்து 665 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று 5 ஆயிரத்து 664 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வந்தது.

    இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 102.74 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.03 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. #MetturDam
    மேட்டூர் அணையில் இருந்து நேற்று 1300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 5 ஆயிரத்து 172 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று 5,025 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து நேற்று 1300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 101.1 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உய்ந்து 101.41 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் நீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 29-ந் தேதியிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கண்டலேறு அணையில் வினாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 595 கனஅடி வீதம் வருகிறது.

    கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 12.25 அடியாக பதிவாகி வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டும் தான் இருப்பில் இருந்தது. தற்போது கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது.

    கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக கடந்த 6-ந் தேதி இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 300 கனஅடி வீதம் திறக்கப்பட்டது.

    இன்று காலை முதல் நீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 24.08 அடியாக பதிவாகியது. 720 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
    மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். #MetturDam
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது.

    கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 28 ஆயிரத்து 79 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 28 ஆயிரத்து 875 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்றிரவு முதல் 33 ஆயிரத்து 492 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருவதால் நேற்று முன் தினம் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    நேற்று அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து 120.4 அடியாக இருந்தது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 75 ஆயிரத்து 170 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 80 ஆயிரத்து 291 கன அடியாக இருந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 75 ஆயிரத்து 811 கன அடியும், மேட்டூர் அணை கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 800 கன அடி தண்ணீரும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி டெல்டாவுக்குட்பட்ட 12 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இந்திரா நகர், மணிமேகலை நகர் பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த பகுதியில் வசித்தவர்கள் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இன்று மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 80 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 70 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கலில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. #MetturDam
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போல தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வருகிறது.

    இதனால் கிருஷ்ணகிரி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 44.28 அடியாகும். அணையின் தற்போதைய நீர்மட்டம் 42.89 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 640 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    இதேபோல கிருஷ்ணகிரி அணையின் தற்போதைய உச்சபட்ச நீர்மட்டம் 42 அடியாகும். நேற்று அணையின் நீர்மட்டம் 38.05 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 662 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று முன்தினம் 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    நேற்று முதல் அணையில் இருந்து 1,017 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரும் நாட்களில் தண்ணீர் வரத்து அதிகமானால் மேலும் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    ×